நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

‘RON95’ எரிபொருள் மோசடி: சிங்கப்பூரர் கைது

கூலாய்:

சிங்கப்பூரர் ஒருவர், தனது வாகனத்தின் பதிவு எண்ணை மறைத்து ‘RON95’ எரிபொருளை வாங்கிய குற்றத்திற்காக, கூலாய் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நாளை சமர்ப்பிக்கப்படுகிறார்.

63 வயதுடைய அந்த குற்றவாளி, தனது 67 வயது மனைவியுடன், ஜொகூர் பாரு, ஆயர் ஹித்தாம் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில், வோக்ஸ்வாகன் ஜெட்டா வாகனத்தின் பதிவு எண்ணை மறைத்து எரிபொருள் நிரப்பும் காட்சி ஒரு வீடியோவில் பதிவாகியிருந்தது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் RM5,000–RM20,000 அபராதம் அல்லது அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறை, அல்லது இரண்டையும் விதிக்கப்படலாம் என குலாய் மாவட்ட காவல் துறைத் தலைவர், உதவி ஆணையர் டான் செங் லீ சுட்டிக்காட்டினார்.

மலேசியா பதிவு வாகனங்களுக்காக மட்டுமே ‘RON95’ எரிபொருளை வாங்க இயலும் என்பதை மலேசிய சட்டம் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால் அந்த காணொலியில், வாகனத்தின் முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் மறைத்து வைத்திருப்பது கவனிக்கப்பட்டது.

- கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset