செய்திகள் மலேசியா
அட்தெக் ஜேடிஎம் கல்லூரி, மலேசிய ஏர்லைன்ஸ் பெர்ஹாட் இடையிலான ஒப்பந்தம்; மாணவர்களுக்கு பயிற்சியுடன் வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் வழங்குகிறது: டத்தோஸ்ரீ ரமணன்
ஷாஆலம்:
அட்தெக் ஜேடிஎம் கல்லூரி, மலேசிய ஏர்லைன்ஸ் பெர்ஹாட் இடையிலான ஒப்பந்தம் மாணவர்களுக்கு பயிற்சியுடன் வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் வழங்குகிறது.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.
மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் மலேசிய ஆள்பல இலாகாவின் அட்தெக் ஜேடிஎம் கல்லூரிக்கு இன்று பணி நிமிர்த்த வருகையை மேற்கொண்டேன்.
ஷாஆலமில் உள்ளடக்கிய அட்தெக் கல்லூரியில் மாணவர்கள் பல்வேறு துறையில் திவேட் கல்வியை பயில்கின்றனர்.
அதே வேளையில் நாடு முழுவதும் 33 அட்தெக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
நாட்டின் தொழில் துறைகளுக்கு தேவையான திவேட் பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்குவதில் மனிதவள அமைச்சு முன்னுரிமை வழங்குகிறது.
அதன் அடிப்படையில் அத்தெக் கல்லூரி மனிதவள அமைச்சின் இந்த இலக்கை வெற்றிகரமாக அடைந்து வருகிறது.
கடந்த 2025ஆம் ஆண்டு வரை தொழில் துறைக்கு தேவையான 95.5 சதவீத பட்டதாரிகளை அட்தெக் கல்லூரி உருவாக்கியுள்ளது.
குறிப்பாக இம்மாணவர்களின் திறனை தொழில் நிறுவனங்கள் அதிகம் விரும்புகின்றனர்.
இது இக்கல்லூரியின் மகத்தான சாதனையாகும் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.
இந்நிலையில் இன்றைய நிகழ்வின் முக்கிய அங்கமாக அட்தெக் ஜேடிஎம் கல்லூரி, மலேசிய ஏர்லைன்ஸ் பெர்ஹாட் இடையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம் விமான பராமரிப்புத் துறை மாணவர்களுக்கு இலவசமான கூடுதல் பயிற்சி, வேலை வாய்ப்புக்கு வழிவகுக்கும்.
பயிற்சியின் இறுதி தவணையில் இம்மாணவர்களுக்கு மலேசிய ஏர்லைன்ஸ் தொழில் பயிற்சிகளை வழங்குகிறது.
இலவசமாகவும் அம்மாணவர்களுக்கு சம்பளமும் வழங்கப்படுகிறது.
அதே வேளையில் திறமையான மாணவர்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
இது பயிற்சி பெறும் மாணவர்களின் வெற்றிக்கும் வழிவகுக்கிறது என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 13, 2026, 6:35 pm
புதிய கடப்பிதழும், அடையாள அட்டையின் முகப்புகளும் போலியானது: உள்துறை அமைச்சகம் விளக்கம்
January 13, 2026, 5:06 pm
மூன்று வாகனங்கள் மோதிய விபத்து: மூன்று ஆண்கள் உயிரிழப்பு
January 13, 2026, 4:51 pm
‘RON95’ எரிபொருள் மோசடி: சிங்கப்பூரர் கைது
January 13, 2026, 3:49 pm
போதைப்பொருள் கும்பலின் எச்சரிக்கை: புவேர்ட்டோ லோபஸில் ஐந்து தலைகள் வெட்டி தொங்கவிடப்பட்ட கொடூரம்
January 13, 2026, 3:32 pm
குளியலறையில் மறைக்கப்பட்ட கைப்பேசி: மாற்றுத் தந்தையின் அருவருப்பான செயல் வெளிச்சம்
January 13, 2026, 2:08 pm
லஞ்சம் வாங்கிய போலிஸ் அதிகாரிக்கு 4 நாட்கள் ரிமாண்ட்
January 13, 2026, 1:33 pm
சரவாக்கை முன்மாதிரியாக கொண்டு பள்ளி மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து வசதி வழங்க வேண்டும்: டத்தோ முருகையா
January 13, 2026, 11:54 am
