நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிவுக்கான காரணங்கள் முழுமையாக ஆராயப்பட வேண்டும்: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிவுக்கான காரணங்கள்
முழுமையாக ஆராயப்பட வேண்டும்.

சிரம்பான் தொகுதி பெர்சத்து சயாப் பிரிவுத் தலைவரும் நீலாய் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளருமான டத்தோ சரவணக்குமார் இதனை கூறினார்.

2026ஆம் ஆண்டுக்கான பள்ளித் தவணை நேற்று தொடங்கியது.

இதில் தமிழ்ப்பள்ளிகளின் முதலாம் ஆண்டில் மொத்தம் 10,330 மாணவர்கள் இணைந்துள்ளன.

கடந்த 2024ஆம் ஆண்டு 11,568 மாணவர்களும் 2025ஆம் ஆண்டில் 11,021 மாணவர்களும் முதலாம் ஆண்டில் இணைந்துள்ளனர்.

கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இவ்வாண்டும் முதலாம் ஆண்டில் இணைந்த மாணவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

இந்த சரிவுக்கு பிறப்பு விகிதம் முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

இது ஒரு பக்கம் உண்மையாக இருந்தாலும் இன்னமும் அதிகமான இந்திய மாணவர்கள் தேசியப் பள்ளி, சீனப் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர்.

இதுபோன்ற பல பிரச்சினைகள் இருப்பதால் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிவுக்கான காரணங்கள் முழுமையாக ஆராயப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset