நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புதிய கடப்பிதழும், அடையாள அட்டையின் முகப்புகளும் போலியானது: உள்துறை அமைச்சகம் விளக்கம்

புத்ரா ஜெயா:

சமூக ஊடகங்களில் பரவி வரும் கருப்பு நிறத்திலான மலேசியா புதிய கடப்பிதழும் (பாஸ்போர்ட்), அடையாள அட்டையின் வடிவமைப்பு படங்கள் அதிகாரப்பூர்வமானவை அல்ல என உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் புதிய கடப்பிதழும், அடையாள அட்டையுடன் தொடர்புடைய வடிவமைப்பு குறித்த அறிவிப்புகள், அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தகவல் வழிகளின் மூலமே வெளியிடப்படும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில், இந்த ஆண்டில் புதிய கடப்பிதழும், அடையாள அட்டையின் அமலாக்கம் குறித்து ஜனவரி 8 அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும், அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களின் அறிவிப்புகளை மட்டுமே பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset