நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

MH370 விமானம் விபத்துக்குள்ளான இடத்தைக் கண்டுபிடித்துவிட்டேன்: பிரிட்டிஷ் விமான பொறியாளர் பேட்டியால் பரபரப்பு

கோலாலம்பூர்:

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடுவானில் திடீரென மாயமான மலேசிய ஏர்லைன்ஸின் MH370 விமானம் இருக்கும் இடத்தை தாம் கண்டுபிடித்துள்ளதாக பிரிட்டிஷ் விமானப் பொறியிலாளர் ரிச்சர்ட் காட்ஃபிரே (Richard Godfrey) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிபிசி ஊடகத்திடம் பேசிய அவர், வெவ்வேறு தளங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற பல்வேறு தரவுகளைக் கொண்டு அந்த விமானம் விபத்துக்குள்ளான இடத்தை தாம் துல்லியமாகக் கண்டறிந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் விமானத்தைக் கண்டுபிடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின்போது சில தகவல்களைப் பரிசீலிக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் தவறிவிட்டதாகவும், MH370 விமானம் தற்போது ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்குத் மேற்கே சுமார் இரண்டாயிரம் கிலோமீட்டர் தொலைவில் இந்தியப் பெருங்கடலின் ஆழமான பகுதியில் இருக்க வேண்டும் என்றும் ரிச்சர்ட் காட்ஃபிரே தெரிவித்துள்ளார்.

MH370 breakthrough as expert 'pinpoints' precise location | news.com.au —  Australia's leading news site

விமானப் பாகங்கள் சுமார் 4 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இருக்கக்கூடும் என்று கணித்துள்ள அவர், தாம் விமானத்தின் இருப்பிடத்தை துல்லியமாகக் கண்டுபிடித்துவிட்டதாக நம்புவதாகவும் கூறியுள்ளார்.

விமானம் கடத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் இது தீவிரவாதச் செயல் என்றும் ரிச்சர்ட் கூறுகிறார். எனினும், மேலதிக தகவல்களை சம்பந்தப்பட்ட தரப்பினர் அளிக்கும் பட்சத்தில் வேறு சில கணிப்புகளை ஏற்க தாம் திறந்த மனதுடன் இருப்பதாகக் கூறுகிறார்.
ரிச்சர்ட் அளித்துள்ள பேட்டியை அடுத்து, MH370 விமானம் குறித்து சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

MH370 breakthrough | Richard Godfrey knows where missing plane is | 7NEWS -  YouTube

கடந்த 2014ஆம் ஆண்டு 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது திடீரென மாயமானது MH370 விமானம். அதற்கு என்ன ஆனது என்பது இன்றுவரை மர்மமாகவே உள்ளது.

விமானத்தை தேடும் முயற்சிகள் இதுவரை எந்தப் பலனையும் அளிக்கவில்லை. அந்த விமானத்தின் பாகங்கள் ஒன்றிரண்டு கிடைத்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

+ - reset