நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சிகளில் ஈடுபடவில்லை: நைய்மா காலித்

கோலாலம்பூர்:

அரசாங்கத்தை கவிழ்க்க எந்த வடிவத்திலான முயற்சிகளிலும் தாம் ஈடுபடவில்லை.

முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிமின் மனைவி நைய்மா காலித் இதனை தெரிவித்தார்.

எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி சம்பந்தப்பட்ட புளூம்பெர்க் வெளிப்பாடுகளுக்குப் பின்னால் தான் இருப்பதாகக் கூறுவதற்கான எந்தவொரு முயற்சியும் பொறுப்பற்றது மட்டுமல்ல.

சம்பந்தப்பட்ட பத்திரிகையாளரை அவமதிப்பதும் ஆகும்.

நான் அரசாங்கத்தை ஸ்திரமின்மைக்கு உட்படுத்த அல்லது கவிழ்க்க முயற்சிக்கிறேன் என்ற குற்றச்சாட்டுகள் நம்ப முடியாத ஒன்று.

மேலும் பிரதமரே எதிர்கொண்ட அரசாங்கத்தை கவிழ்த்ததாக கடந்த கால குற்றச்சாட்டுகளை நமக்கு நினைவூட்டுகிறது.

அவர் ஒருமுறை அதிகாரத்தைக் கைப்பற்ற ஒரு பெரிய எண்ணிக்கையிலான ஆதரவு இருப்பதாக அறிவித்தார்.

அவரைப் போலல்லாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை ஸ்திரமின்மைக்கு உட்படுத்தவோ அல்லது கவிழ்க்கவோ எந்தவொரு முயற்சியிலும் நான் ஈடுபட்டதில்லை.

சிந்தித்ததில்லை அல்லது ஆதரித்ததில்லை என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset