நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாகான் டத்தோவில் 1,000 இந்திய மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி: துணைப் பிரதமர் வழங்கினார்

பாகான் டத்தோ:

பாகான் டத்தோ நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 1,000 இந்திய மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது.

துணைப் பிரதமரும் அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இந்த உதவியை வழங்கினார்.

துணை பிரதமரின் இந்தியர் விவாகாரப் பிரிவு சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி ஏற்பாட்டில் இந்த விழா சிறப்பாக நடந்தேறியது.

துணை பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி மண்டபத்திற்கு வந்தபோது இந்திய மாணவர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பை நல்கினர்.

பாலர் பள்ளி பாடசாலையை சேர்ந்த 200 மாணவர்களுக்கு தலா 100 வெள்ளியும் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த 691 மாணவர்களுக்கு தலா 100 வெள்ளியும் கல்வி நிதியாக வழங்கப்பட்டது.

மேலும் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் 10 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காவது முறையாக பாகான் டத்தோ நாடாளுமன்ற தொகுதியில் உள்ள இந்திய மாணவர்களுக்கு கல்வி நிதி வழங்கப்படுகிறது என்று அர்விந்த் அப்பளசாமி தெரிவித்தார்

பாகான் டத்தோ நாடாளுமன்ற தொகுதியில் 14 தமிழ்ப் பள்ளிகள் உள்ளன.

இந்த 14 தமிழ்ப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கு தலா 2,000 வெள்ளி  வழங்கப்பட்டது.

பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி சிறப்பாக சேவையாற்றி வருகிறார்.

இனம் மதம் பார்க்காமல் அனைத்து இனங்களையும் அரவணைத்து துணை பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி சேவையாற்றி வருவது மிகவும் பாராட்டுக்குரியது என்று அவர் சொன்னார்.

பாகான் டத்தோ நாடாளுமன்ற தொகுதியில் உள்ள இந்திய மாணவர்களுக்கு டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி மிகப்பெரிய அளவில் உதவிகளை வழங்கி வருகிறார் இவர் அர்விந்த் அப்பளசாமி தமது உரையில் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஊத்தாங் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் வசந்தி சின்னதம்பி உட்பட பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset