நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சம்சுல் ஹரிஸின் மரணம்; பிரிவு 304இன் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது ஏன்?: தாயார் கேள்வி

கோத்தா திங்கி:

சம்சுல் ஹரிஸின் மரண விவகாரத்தில் பிரிவு 304 இன் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது தொடர்பில் அவரின் தாயாரான உம்மு ஹைமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஆண்டு எனது மகன் இறந்ததைத் தொடர்ந்து, கோத்தா திங்கி அமர்வு நீதிமன்றத்தில் மூன்று ரிசர்வ் அதிகாரி பயிற்சியாளர்கள் மீதான குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து நான் நிம்மதி அடைகிறேன்.

இருப்பினும் வழக்கு நடவடிக்கைகள் பிரிவு 302 இன் கீழ் சுமத்தப்படாததில் இன்னும் நான் அதிருப்தி அடைகிறேன்.

சட்டத்துறை தலைவர் முதலில் டிசம்பர் 2 ஆம் தேதி ஒரு அறிக்கையை வெளியிட்டது.

அதில் பிரிவு 302 இன் கீழ் கொலைக் குற்றம் என்று கூறியது.

ஆனால் இன்று பிரிவு 304 இன் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

முன்னதாக, தேசிய போலிஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலித் இஸ்மாயில் ஒரு ஊடக அறிக்கையின் மூலம், போலிஸ் கடந்த செவ்வாய்க்கிழமை ஏஜிசியிடமிருந்து வழக்கின் விசாரணை ஆவணங்களைத் திரும்பப் பெற்றதாகவும், கொலைக்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுவதாகவும் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset