செய்திகள் மலேசியா
விஜயலட்சுமியின் இறப்பு சான்றிதழ், இழப்பீட்டை அரசு விரைந்து வழங்க கோரிக்கை
கிள்ளான்:
ஜாலான் மஸ்ஜித் இந்தியா நிகழ்ந்த நில அமிழ்வு சம்பவத்தில் மரணமடைந்த விஜயலட்சுமியின் இறப்பு சான்றிதழ், இழப்பீட்டை அரசாங்கம் விரைந்து வழங்க வேண்டும்.
விஜயலட்சுமியின் குடும்பத்தார் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் ஏற்பட்ட நிலச்சரிவு விபத்தில் சிக்கிய விஜயலட்சுமி காலமானார்.
இந்நிலையில் அவரின் குடும்பத்தினர் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் வாரிசுகளின் தலைவிதியைப் பாதுகாக்க இழப்பீட்டு செயல்முறையை விரைவுபடுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
2024 ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று நடந்த சம்பவத்தில், இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் குப்பத்தைச் சேர்ந்த 48 வயதான பாதிக்கப்பட்டவர் எட்டு மீட்டர் ஆழமான குழியில் விழுந்து காணாமல் போனார்.
மேலும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை ஒன்பது நாட்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது.
இறந்தவரின் குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் முகமது சைஃபுல்லா முகமது அஸ்மி,
பாதிக்கப்பட்டவரின் நிலை தற்போது காணாமல் போன நபர் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் அவரது இறப்புச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று கூறினார்.
அவரின் இறப்புச் சான்றிதழை வழங்குவதற்காக பிப்ரவரி 24 அன்று சட்டத்துறை தலைவர் அலுவலகம், தேசிய பதிவுத் துறை ஆகியவற்றிற்கு அதிகாரப்பூர்வ விண்ணப்பம் அனுப்பப்பட்டது.
இறப்புச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே இழப்பீட்டு கோரிக்கையை அடுத்த நடவடிக்கைக்காக செயல்படுத்த முடியும்.
காணாமல் போனவர் என்ற நிலை இருக்கும் வரை, எந்த இழப்பீட்டையும் பெற முடியாது என்று அவர் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 27, 2026, 10:57 pm
அனைத்துலகத் தமிழர் சித்தர் மரபு மாநாடு; சித்தர் மரபுகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும்: டத்தோ சிவக்குமார்
February 27, 2026, 9:26 pm
பாகான் டத்தோவில் இனம், மதம், மொழி பாராமல் மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் கவனம் செலுத்தப்படுகிறது: ஜாஹித்
February 27, 2026, 6:54 pm
உலக அரங்கில் மின்னும் கின்றாரா தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களை டத்தோஸ்ரீ ரமணன் பாராட்டினார்
February 27, 2026, 6:37 pm
அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சிகளில் ஈடுபடவில்லை: நைய்மா காலித்
February 27, 2026, 5:45 pm
பாகான் டத்தோவில் 1,000 இந்திய மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி: துணைப் பிரதமர் வழங்கினார்
February 27, 2026, 5:24 pm
காரும் ட்ரைலரும் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்
February 27, 2026, 3:15 pm
“காவல்துறையினர் லஞ்சம் பெறவில்லை”: போலிஸ் அதிகாரி முஹம்மத் ரோஸ்டி தாவூத்தின் விளக்கம்
February 27, 2026, 2:43 pm
