செய்திகள் மலேசியா
காரும் ட்ரைலரும் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்
தானா மேரா:
கடந்த வியாழக்கிழமை இங்குள்ள ஜெடோக்கில் பெரோடுவா கன்ச்சில் காரும் டிரெய்லரும் மோதிய விபத்தில் கார் ஓட்டுநர் உயிரிழந்தார்.
பாதிக்கப்பட்ட 31 வயதான முஹம்மத் சியாஹ்மி ஹஸ்புல்லா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகச் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து தமது தரப்புக்கு மாலை 4.39 மணி அளவில் தகவல் கிடைத்ததாகக் கெமாஹாங் தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் (BBP) இயக்குநர், மூத்த தீயணைப்பு அதிகாரி இஸ்மாதி முஹம்மத் தாயிப் தெரிவித்தார்.
சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவர் ஓட்டிச் சென்ற கார் சுழன்று பெரோடுவா விவா மீது மோதி விழுந்ததாக நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.
டிரெய்லர் சாலையிலிருந்து சறுக்கி, அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பெரோடுவா அல்சா பல்நோக்கு வாகனம் (MPV) மீது மோதியதாக நம்பப்படுகிறது என்று இஸ்மாடி தெரிவித்தார்.
பெரோடுவா விவாவின் ஓட்டுநருக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாகவும், டிரெய்லரின் ஓட்டுநருக்கு எந்த காயங்களும் ஏற்படவில்லை என்றும் மேலும் பேசிய அவர் கூறினார்.
"எட்டு அதிகாரிகளும் பணியாளர்களின் ஒத்துழைப்புடன் மாலை 5 மணிக்கு இந்த நடவடிக்கை முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது," என்றார் அவர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 27, 2026, 10:57 pm
அனைத்துலகத் தமிழர் சித்தர் மரபு மாநாடு; சித்தர் மரபுகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும்: டத்தோ சிவக்குமார்
February 27, 2026, 9:26 pm
பாகான் டத்தோவில் இனம், மதம், மொழி பாராமல் மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் கவனம் செலுத்தப்படுகிறது: ஜாஹித்
February 27, 2026, 6:54 pm
உலக அரங்கில் மின்னும் கின்றாரா தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களை டத்தோஸ்ரீ ரமணன் பாராட்டினார்
February 27, 2026, 6:37 pm
அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சிகளில் ஈடுபடவில்லை: நைய்மா காலித்
February 27, 2026, 6:19 pm
விஜயலட்சுமியின் இறப்பு சான்றிதழ், இழப்பீட்டை அரசு விரைந்து வழங்க கோரிக்கை
February 27, 2026, 5:45 pm
பாகான் டத்தோவில் 1,000 இந்திய மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி: துணைப் பிரதமர் வழங்கினார்
February 27, 2026, 3:15 pm
“காவல்துறையினர் லஞ்சம் பெறவில்லை”: போலிஸ் அதிகாரி முஹம்மத் ரோஸ்டி தாவூத்தின் விளக்கம்
February 27, 2026, 2:43 pm
