நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

“காவல்துறையினர் லஞ்சம் பெறவில்லை”: போலிஸ் அதிகாரி முஹம்மத் ரோஸ்டி தாவூத்தின் விளக்கம்

கோலாலம்பூர்:

சமூக வலைதளங்களில், ஒரு வீடியோவில், போலிசார் வாகன ஓட்டுநர்களிடமிருந்து லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் செராஸ் மாவட்டத் தலைமை போலிஸ் அதிகாரி முஹம்மத் ரோஸ்டி தாவூத் இதனை மறுத்தார்.

புதன்கிழமை காலை 11.20 மணிக்கு, ரோந்துப் பணியில் நான்கு போலிசார் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில் இரண்டு வாகனங்களுக்கு போக்குவரத்து இடையூறு விளைவித்த காரணமாக அபராதம் விதிக்கப்பட்டது. அதனால் இந்தச் சம்பவத்தை தவறாக புரிந்துகொள்ளாமல் இருக்கும்படி போலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டனர். 

இந்த சம்பவம் தொடர்பாக உண்மையான தகவல் இருந்தால், அவர்கள் கோலாலம்பூர் காவல்துறையின் ஹாட்லைனை 03-2115 9999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset