நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

வணக்கம் இந்தியா நான்காம் கிளை உணவகம் ஜொகூர் தாமான் உங்கு துன் அமினாவில் அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது

ஜொகூர் பாரு:

வணக்கம் இந்தியா உணவகத்தின் நான்காம் கிளை உணவகம் அக்டோபர் 26ஆம் தேதி ஸ்கூடாய் தாமான் உங்கு துன் அமினாவிஅதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது.

ஸ்கூடாய் சட்டமன்ற உறுப்பினர் மரினா பிந்தி இப்ராஹிம் சிறப்பு வருகை தந்து வணக்கம் இந்தியா உணவகத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வணக்கம் இந்தியா உணவகத்தில்
தென்னிந்திய வாழை இலை உணவு வகைகள், அன்பான விருந்தோம்பல் மற்றும் மகிழ்ச்சியான தருணங்களை காண முடிகிறது.

தென்னிந்திய உணவு வகைகளை சுவைத்து சாப்பி்ட்டு மகிழ வணக்கம் இந்தியா உணவகம் சரியான தேர்வாகும்.

இதற்கு முன்னர் மூன்று இடங்களில் வெற்றிகரமாக இயங்கி வரும் வணக்கம் இந்தியா உணவகம் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளது.

அந்த வகையில் இப்போது நான்காவது கிளை உணவகம் ஜொகூர் மாநிலத்தில் திறப்பு விழா கண்டுள்ளது.

ஜொகூர் மாநில மக்கள் உட்பட அனைவரும் வணக்கம் இந்தியா உணவகத்தில் தங்களுக்கு பிடித்தமான தென்னிந்திய உணவு வகைகளை உண்டு மகிழலாம் சிவா, பானு ஜெயகணேஷ், பால விக்னேஷ் ஆகியோர் அன்போடு அழைக்கிறார்கள்.

இந்த உணவக திறப்பு விழாவில் புளு பிரதர்ஸ் சமூக நல சங்கத்தின் தலைவர் சமாட், தில்லை, மைக்,  ஜொகூர் பாரு சங்கத்தைச் சேர்ந்த மணி, பாஸ்கரன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset