
செய்திகள் மலேசியா
சரவாக் தேர்தல்: 4G இணையத் தொடர்பு மோசமாக உள்ள இடங்களில் நேரடிப் பிரசாரத்துக்கு அனுமதி
கூச்சிங்:
சரவாக்கில் இணைய சேவை மோசமாக உள்ள 64 தொகுதிகளில் மட்டும் நேரடி தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. பிரசாரத்தின்போது கொரோனா கட்டுப்பாடுகள், SOPக்களை முழுமையாகப் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம்தெரிவித்துள்ளது.
சரவாக் மாநிலத்தில் 12ஆவது சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. கொரோனா தொற்றுப்பரவல் தடுப்பு நடவடிக்கையாக அங்கு நேரடிப் பிரசாரம் இருக்காது எனக் கருதப்பட்டது.
எனினும் அங்கு பல்வேறு பகுதிகளில் இணையத் தொடர்பு மோசமாக இருப்பதாகவும், எனவே மின்னிலக்க, இணையம் வழியிலான பிரசாரங்கள் மூலம் வாக்காளர்களை முழுமையாகச் சென்றடைய இயலாது என்றும் ஒரு தரப்பினர் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் 22 நாள்கள் நடைபெற உள்ள பிரசாரத்தின் போது, 4G இணையச் சேவை மோசமாக உள்ள இடங்களில் நேரடிப் பிரசார கூட்டங்களை நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி 64 இடங்களில் இவ்வாறு பிரசாரம் செய்ய இயலும்.
எனினும் ஒவ்வொரு பிரசார கூட்டமும் இரண்டு மணி நேரம் மட்டுமே நடைபெற வேண்டும் என்றும், இரவு பத்து மணிக்கு முன்பே அவை நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
எந்த இடத்தில், எப்போது மணிக்கு பிரசார கூட்டம் நடைபெறுகிறது என்பதை தெரிவித்து, அதன் ஏற்பாட்டாளர்கள் காவல்துறையிடம் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்பதும் அவசியமாகும்.
ஏற்பாட்டாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், வேட்பாளர்கள், சொற்பொழிவாளர்கள் பிரசார கூட்டங்களுக்கு முன்பு சுயபரிசோதனைக் கருவிகள் மூலம் தங்களுக்கு தொற்று உள்ளதா என்பதை சோதித்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
October 17, 2025, 10:26 pm
ஆர்எச்பி வங்கி கணக்கை மூடும் நடவடிக்கைக்கு தற்காலிக தடை விதித்து மேரிடைம் நெட்வொர்க் நிறுவனம் வெற்றி பெற்றது
October 17, 2025, 6:47 pm
ஆலயங்களுக்கான தர்ம மடானி நிதி திட்டத்திற்கு அக்டோபர் 18 முதல் விண்ணப்பம் செய்யலாம்: மித்ரா
October 17, 2025, 6:32 pm
தேசிய முன்னணியில் நீடிப்பதும் வெளியேறுவதும் மஇகாவைப் பொறுத்தது: ஜாஹிட்
October 17, 2025, 6:31 pm
ஆவண மோசடி குற்றச்சாட்டுகள் காரணமாக எப்ஏஎம் செயலாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்: டத்தோ சிவசுந்தரம்
October 17, 2025, 5:27 pm
நெகிழி இல்லாத தீபாவளியைக் கொண்டாடுவோம்: சுப்பாராவ் வேண்டுகோள்
October 17, 2025, 3:32 pm