நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஊடக துறைக்கு நவீன மாற்றம்: 34 நிறுவனங்களுக்கு பெரும் ஊக்க நிதி

புத்ராஜெயா: 

மாடானி அரசு, உள்ளூர் ஊடகத் துறையின் தொடர்ச்சியையும் மாற்றங்களையும் உறுதிப்படுத்தும் வகையில், ஊடக நவீனத்திற்கான நிதி (Media Innovation Fund) முதல் கட்டத்தை 34 ஊடக நிறுவனங்களுக்கு வழங்கி, RM12.38 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளது.

தொடர்பு அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ அப்துல் ஹாலிம் ஹம்சா, இந்த நிதியுதவி ஊடகத் துறை போட்டி தகுதியுள்ளதும், நவீனமாகவும், வேகமாகவும், டிஜிட்டல் சூழ்நிலைகளுக்கு முன்னேறக்கூடியதாகவும் இருக்க உதவுவதாகும் என்று தெரிவித்தார்.

“இன்று ஊடகத் துறை, டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம், மக்களின் தகவல் பயன்பாட்டு முறைமைகளின் மாற்றம், வணிக மாடல்களுக்கு எதிரான சவால்கள் காரணமாக முக்கிய மாற்றக் கட்டத்தில் உள்ளது.

“ஆகையால், ஊடக நவீனத்திற்கான நிதி அறிமுகப்படுத்தப்பட்டு, நிறுவனங்கள் புதிய அணுகுமுறைகளை ஆராயவும், தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும், துறையில் முக்கியத்துவம் பெறுவதற்குத் திறனை வளர்க்கவும் உதவுகிறது,” என்று அவர் கூறினார்.

 மேலும், துணைப் பொதுச்செயலாளர் (மூலோபாயத் தொடர்புகள், படைப்பாக்கத் தொழில்கள்) நிக் கமரூசமான் நிக் ஹுசின் உட்பட துணைப் பொதுச்செயலாளர் (தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு) மனோ வீரபத்ரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதோடு, மீடியா பிரிமா டெலிவிஷன் நெட்வொர்க்ஸ் (MPTN), பிரைம்வொர்க்ஸ் ஸ்டுடியோஸ் தலைமை நிர்வாக அதிகாரி நினி யூசோப்,  மீடியா பிரிமா குழுமம் எடிட்டர் ஜாஸ்பண்ட் சிங் ஆகியோர் கடிதங்களைப் பெற்றனர்.

இந்த நிதி ஊழியர்கள் பயிற்சி, தொழில்நுட்ப வளர்ச்சி, ஆராய்ச்சி & மேம்பாட்டு (R&D) முதலியவற்றில் முழுமையாக பயன்படுத்தப்படும்.

“மடானி அரசு குறிப்பாக டத்தோ ஃபாஹ்மி ஃபாஸில் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்," என்று நினி தெரிவித்தார்.

“இதன் மூலம் ஊடகக் தொழில்நுட்ப முன்னேற்றம், செய்தி வழங்கல் தரம், ஊழியர்களின் திறன் மேம்படுத்தப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

ஏற்கனவே, 1 முதல் 14 ஜனவரி வரை, ஊடக நிறுவனங்களின் விண்ணப்பங்களை ஏற்று, 50 விண்ணப்பங்கள் பதிவாகியிருந்தது.

அந்த 50 விண்ணப்பங்களில் கொடுக்கப்பட்ட திட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் விரிவான மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு 34 நிறுவனம் நிதி பெறும் வாய்ப்பு பெற்றது.

இந்த நிதி ஊடகத் துறையில் இன்னும் பல புதிய முயற்சிகளுக்கு ஊக்கமாக விளங்கி, உள்ளூர் ஊடக சூழலை நிலைத்துவைக்க உதவும் என தொடர்பு துறை அமைச்சகம் எதிர்பார்க்கப்படுகிறது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset