நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிலிருந்து சீனாவுக்கு விமான சேவை

கொல்கத்தா:

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவிலிருந்து சீனாவின் குவாங்ஷோக்கு நேரடிசேவை ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு துவங்கியது.

கொரோனா வைரஸ் காரணமாக,2020ல் இந்தியா சீனா இடையிலான விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் லடாக் எல்லை பிரச்னையில் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதலை அடுத்து அந்த சேவை நிரந்தரமாக நிறுத்தப்பட்டது.
 

அதன் பின்னர் ஐந்து ஆண்டுகளுக்கு பிகச கொல்கட்டாவில் இருந்து சீனாவின் குவாங்ஷோ நகருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இண்டிகோ' விமானம் ஞாயிற்றுக்கிழமை 10:00 மணிக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் இரு நாட்டு பயணியரும் உற்சாகத்துடன் பயணம் செய்தனர். இதேபோல்

சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம், அடுத்த மாதம் 9ம் தேதி முதல் அந்நாட்டின் ஷாங்காய் - தில்லியேயான விமானப் போக்கு வரத்தை துவங்க உள்ளது. இதன் வாயிலாக, இந்தியா - சீனா இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக உறவு விரிவடையும் என இரு நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset