
செய்திகள் மலேசியா
கோலாலம்பூரில் '5G' சேவைக்கான சோதனையோட்டம்: டெலிகோம் மலேசியா அறிவிப்பு
கோலாலம்பூர்
இம்மாதம் அரசு முகமை ஒன்றுடன் இணைந்து '5G' சேவைக்கான வெள்ளோட்டத்தை நடத்த இருப்பதாக டெலிகோம் மலேசியா பெர்ஹாட் (TM) தெரிவித்துள்ளது.
கோலாலம்பூர் மற்றும் இரண்டு நகர்ப்புற மையங்களில் இந்தச் சோதனை முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அந்நிறுவனம் சனிக்கிழமை அன்று கூறியது.
நாட்டில் '5G' சேவைக்கான சோதனை முன்னோட்டத்தில் பங்கேற்கும் முதல் தொலைத் தொடர்பு நிறுவனம் இதுவாகும். எனினும், அரசாங்கத்தின் '5G' வலைப்பின்னல் சேவையைப் பயன்படுத்துவதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதா என்பதை அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை.
அதே வேளையில், நாட்டு மக்களுக்கு '5G' சேவையை வழங்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் அபிலாஷைக்கு (விருப்பத்துக்கு) டெலிகோம் மலேசியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
'5G' சேவைக்கான கட்டணம் மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பில் நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சில அதிருப்திகளை வெளிப்படுத்தி உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கடந்த மாதம் தெரிவித்திருந்தது.
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 1:47 pm
தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி; 100 அணிகள் பங்கேற்றுள்ளன: பத்துமலை
July 12, 2025, 12:18 pm
மலாக்காவில் ரிக்ஷா சேவைக்கு இணையத்தில் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம்
July 12, 2025, 11:28 am
இணைய மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
July 12, 2025, 10:52 am
தாயுடன் ஒரு நாள் வெளியே சென்ற மகள்: நெஞ்சை உருக்கும் வீடியோ சமூக ஊடக்த்தில் வைரல்
July 12, 2025, 10:39 am
திருமண நகைகள் போலி: அறிந்து அதிர்ந்த தனித்து வாழும் தாய்!
July 12, 2025, 10:00 am