செய்திகள் உலகம்
பாகிஸ்தானில் இலங்கை நாட்டவர் கொலை: இலங்கை நாடாளுமன்றம் கண்டனம்
கொழும்பு:
மதநிந்தனை புகாரில் இலங்கையைச் சேர்ந்தவர் பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு இலங்கை நாடாளுமன்றம் சனிக்கிழமை கண்டனம் தெரிவித்தது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்; இலங்கையைச் சேர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்ற தனது உறுதியை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நிறைவேற்றுவார் என நம்புவதாக பிரதமர் மகிந்த ராஜபட்ச கூறியுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த பிரியந்தா குமாரா (40) பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் குரான் வசனங்களை அவமதித்ததாக கூறி கும்பலாக கூடி அவரை அடித்து கொலை செய்தனர்.
இந்த சம்பவத்துக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக 100 பேரை கைது செய்துள்ளதாகவும், மேலும் பலரை தேடி வருவதாகவும் பஞ்சாப் காவல் துறையினர் வெள்ளிக்கிழமை மாலை தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
September 14, 2026, 1:16 pm
மீன்களை பாலியல் வன்கொடுமை செய்த நபர்: சிசிடிவி ஆதாரத்துடன் கைது செய்த காவல்துறை
September 13, 2026, 8:03 pm
சிங்கப்பூர் பிரதமர் வோங் முன்னிலையில் நசீர் கனிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
September 12, 2026, 10:43 pm
தாய்லாந்து-கம்போடிய எல்லையில் 8.4 கிலோமீட்டர் நீளமான சுவரை அமைக்கும் தாய்லாந்து
September 11, 2026, 9:51 pm
நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதல்: 25 ஆண்டுகள் நிறைவு
September 11, 2026, 7:21 am
சரக்கு கப்பலில் தீ: 25 பேர் கருகி பலி
September 10, 2026, 11:36 am
வங்கதேசத்தில் தீவிரம் காட்டும் தட்டம்மை: 999 போ் உயிரிழப்பு
September 10, 2026, 9:14 am
