செய்திகள் ASEAN Malaysia 2025
தென்கிழக்கு ஆசியாவுடன் அமெரிக்கா 100% ஆதராகவும் துணையாகவும் இருக்கும்: டிரம்ப்
கோலாலம்பூர்:
தென்கிழக்கு ஆசியாவுடன் அமெரிக்கா 100% ஆதராகவும் துணையாகவும் இருக்கும்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதனை கூறினார்.
இந்தோ-பசிபிக் வட்டாரத்திற்கான வாஷிங்டனின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா தென்கிழக்கு ஆசியாவுடன் 100% இருப்பதாகவும், நீண்ட காலத்திற்கு ஒரு வலுவான, நம்பகமான கூட்டாளியாக இருக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.
13ஆவது ஆசியான்-அமெரிக்கு உச்சி மாநாட்டில் பேசிய டிரம்ப், கூட்டத்தை நடத்தியதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை வெகுவாகப் பாராட்டினார்.
மேலும் மலேசியாவின் தலைமை உலகளாவிய இராஜதந்திரத்தில் பிராந்தியத்தின் வளர்ந்து வரும் பங்கைப் பிரதிபலிப்பதாகக் கூறினார்.
தென்கிழக்காசிய நாடுகளுக்கு எனது செய்தி என்னவென்றால், அமெரிக்கா உங்களுடன் 100% உள்ளது.
மேலும் நீண்ட காலத்திற்கு வலுவான கூட்டாளிகளாகவும் நண்பர்களாகவும் இருக்க நாங்கள் விரும்புகிறோம்.
ஒன்றாக, பசிபிக் பெருங்கடலின் இருபுறமும் உள்ள நாடுகளுக்கு அசாதாரண செழிப்பை உருவாக்குவோம்.
மேலும் நமது அனைத்து மக்களுக்கும் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 26, 2025, 9:48 pm
வட்டார கால்பந்து மேம்பாட்டிற்காக ஆசியான், பிபா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன
October 26, 2025, 9:42 pm
கிழக்காசிய உச்ச நிலை மாநாட்டிற்காக சீனப் பிரதமர் லீ கியாங் மலேசியா வந்தடைந்தார்
October 26, 2025, 9:38 pm
கிழக்காசிய உச்ச நிலைமாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்ய துணைப் பிரதமர் மலேசிய வந்தடைந்தார்
October 26, 2025, 5:05 pm
டிரம்பின் 20 அம்ச காசா ஒப்பந்தத்திற்கு பிரதமர் அன்வார் பாராட்டு
October 26, 2025, 3:45 pm
தாய்லாந்து, கம்போடியா அமைதி முயற்சிகளுக்கு முன்னோடியாக இருந்த டத்தோஸ்ரீ அன்வாரை டிரம்ப் பாராட்டினார்
October 26, 2025, 2:45 pm
