நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

"மின்-சிகரெட்களுக்கு எதிரான போராட்டம் - ஆசியான் ஒன்றிணைய வேண்டும்": சிங்கப்பூர் அமைச்சர் ஓங் இ காங்

சிங்கப்பூர்:

மின்-சிகரெட்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் ஆசியான் கருத்திணக்கம் காண வேண்டும் என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung) வலியுறுத்தியிருக்கிறார்.

முடிந்தவரை, ஆசியான் நாடுகள் மின்-சிகரெட்கள் மிக ஆபத்தானவை என்பதில் ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும் என்றார் அமைச்சர்.

மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் மின்-சிகரெட்கள் இன்னும் அனுமதிக்கப்படுகின்றன; எனவே வட்டார அளவில் வலுவான நடவடிக்கை தேவை என்றார் அவர்.

பில்லியன் கணக்கில் மதிப்புடைய மின்-சிகரெட் துறையைத் துடைத்தொழிப்பது சவால்மிக்கது என்று கூறினார் அமைச்சர் ஓங்.

அதனால் மின்-சிகரெட்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு திட்டத்தை கொண்டுவருவது முக்கியம் என்றார்.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset