நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

ஆசியான் ஒத்துழைப்பு வட்டார எதிர்காலத்தை வடிவமைக்கும்: ஜப்பான் புதிய பிரதமர் நம்பிக்கை

கோலாலம்பூர்:

ஆசியான் ஒத்துழைப்பு வட்டார எதிர்காலத்தை வடிவமைக்கும் என்று ஜப்பான் புதிய பிரதமர் சானே தகைச்சி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் வெளியுறவு அமைச்சின் பத்திரிகை செயலாளர் தோஷிஹிரோ கிடாமுரா இதனை உறுதிப்படுத்தினார்.

வட்டார ஒத்துழைப்புக்கான கூட்டு கட்டமைப்பாக சுதந்திரமான, திறந்த இந்தோ-பசிபிக்  உத்தியை ஆசியான் முறையாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.

இதன் பிறகு, புதிய பிரதமர் சானே தகைச்சியின் கீழ் ஜப்பான் அந்த நாடுடன் உறவுகளை வலுப்படுத்த உள்ளது.

மேலும் புதிய உத்வேகம் ஒரு தசாப்த கால நிலையான ராஜதந்திரத்தை மட்டுமல்ல, ஆசியானை சமமான நிலையில் கொண்ட ஒரு வட்டார கட்டமைப்பை உருவாக்குவதில் தனது நாட்டின் நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது.

நிச்சயமாக, ஜப்பான் ஒரு பெரிய சக்தி, ஆனால் அமெரிக்கா அல்லது சீனா போன்ற உலக வல்லரசு அல்ல.

எனவே, ஆசியானுடன் ஒரே மட்டத்தில் பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset