நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

மியான்மர் மீதான ஐந்து அம்ச ஒருமித்த கருத்தை செயல்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

மியான்மார் மீதான ஐந்து அம்ச ஒருமித்த கருத்தை செயல்படுத்துவதில் படிப்படியான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

 பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

இந்த ஆண்டு ஆசியான் தலைவராக, ஐந்து அம்ச ஒருமித்த கருத்தின் கீழ் அனைத்து உறுப்பு நாடுகளும் கூட்டாக ஒப்புக் கொண்ட அளவுருக்களுக்குள் வட்டார கூட்டமைப்பு தொடர்ந்து ஈடுபடும்.

ஆம், சவால்கள் உள்ளன. ஆனால் அவை சமீபத்திய ஆண்டுகளில் நடந்ததைவிட மிகச் சிறியவை.

மியான்மார் அல்லது ஆசியானில் இருந்து எங்களுக்கு 200,000 அகதிகள் உள்ளனர்.

ஆனால் கடந்த ஒரு வருடமாக, இதுபோன்ற ஒரு பிரச்சினையை நாங்கள் எதிர்கொள்ளவில்லை.
 
நேற்று இரவு 47ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாட்டின் போது நடைபெற்ற ப்ளூம்பெர்க் வணிக உச்சி மாநாட்டின் தொடக்க விருந்தில் பிரதமர் இவ்வாறு கூறினார்.

அரசியல் அல்லது குழு வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல், மனிதாபிமான உதவிக்கான முழுமையான,  விரிவான அணுகலை மியான்மர் அனுமதிக்க வேண்டும் என்பது ஒருமித்த கருத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளில் ஒன்றாகும்.

மனித உரிமைகள் பற்றி நாம் பேசும்போது அது இன்னும் திருப்திகரமாக இல்லை.

ஆனால் எனக்கு, நாம் காணக்கூடிய படிப்படியான முன்னேற்றம் இது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset