நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

மலேசியா 'ஒரு சிறந்த, மிகவும் துடிப்புமிக்க நாடு': டிரம்ப் பாராட்டு 

கோலாலம்பூர்:

47வது ஆசியான் உச்சி மாநாடும் தொடர்புடைய இதர உச்சிமாநாடுகளுக்கான தனது இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்ட புறப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மலேசியாவை "ஒரு சிறந்த, மிகவும் துடிப்பான நாடு" என்று வர்ணித்துள்ளார்.

இன்று ஜப்பானுக்குப் புறப்பட்ட டிரம்ப், தனது ட்ரூத் சோஷியல் கணக்கில் ஒரு பதிவில், 47வது ஆசியான் உச்சி மாநாடு மற்றும் தொடர்புடைய உச்சிமாநாடுகளை நடத்தும் மலேசியாவுடன் அமெரிக்கா பெரிய வர்த்தக அரிய  ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாகக் கூறினார்.

மிக முக்கியமாக, ஞாயிற்றுக்கிழமை தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான சமாதான ஒப்பந்தத்தின் கையெழுத்தை தாம் பெரிதும் விரும்பியதாக அவர் கூறினார்.

"போர் இல்லை! மில்லியன் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

"இதைச் செய்து முடித்தது மிகவும் பெருமைக்குரியது. "இப்போது, ​​ஜப்பானுக்குப் புறப்படுகிறேன்" என்று டிரம்ப்  பதிவிட்டுள்ளார்.

47வது ஆசியான் உச்சி மாநாடு மற்றும் தொடர்புடைய உச்சிமாநாடுகளில் கலந்து கொள்வதற்காக டிரம்ப் நேற்று காலை 10 மணியளவில் மலேசியாவை வந்தடைந்தார். இன்று காலை 10.06 மணிக்கு புறப்பட்டார், இது மலேசியாவுக்கான தனது முதல் பயணத்தின் முடிவையும், ஜனவரி 2025 இல் தனது இரண்டாவது அதிபர் பதவியில் அமர்ந்ததிலிருந்து ஆசியான் தலைவர்கள் உச்சிமாநாட்டில் அவர் பங்கேற்ற முதல் இடத்தையும் குறிக்கிறது.

உச்சிமாநாட்டில், டிரம்ப், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னிலையில் தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல், கம்போடிய பிரதமர் ஹுன் மானெட் இடையே வரலாற்று சிறப்புமிக்க KL அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

தனது நெருக்கடியான அட்டவணை இருந்தபோதும், ​​டிரம்ப் அன்வருடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினார், மலேசியா-அமெரிக்க பரஸ்பர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். மேலும் முக்கியமான கனிமங்களில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டார்.

அவர் 13வது ஆசியான்-அமெரிக்க உச்சிமாநாட்டிலும் கலந்து கொண்டார்.

வரலாற்றில் மலேசியாவுக்கு வருகை தந்த மூன்றாவது அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆவார். 1966 இல் லிண்டன் பி. ஜான்சன்,  2015 இல் பராக் ஒபாமா வந்திருந்தனர்.

ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset