நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

எதிர்கால சுகாதார நெருக்கடிகளைச் சமாளிக்க ஆசியான் பிளஸ் த்ரீ - APT - ஆதரவு அளிக்கும்: பிரதமர் அன்வார் 

கோலாலம்பூர்:

ஆசியான் பிளஸ் த்ரீ (APT) கூட்டாண்மை, பொது சுகாதார நெருக்கடிகள் உட்பட எதிர்கால அவசரநிலைகளுக்கு கூட்டுத் தயார்நிலையை வலுப்படுத்தும் திட்டங்களுடன், முதிர்ச்சியான,  மீள்தன்மை கொண்ட பிராந்திய பொறிமுறையாக பரிணமித்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் நிறுவப்பட்டு 1997 ஆசிய நிதி நெருக்கடிக்குப் பிறகு முறைப்படுத்தப்பட்ட இந்த கலந்துரையாடல், கோவிட்-19 தொற்றுநோய் உட்பட பல அறைகூவல்களின் மூலம் பிராந்திய ஒத்துழைப்புடன் மீள்தன்மையை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது என்று அவர் கூறினார்.

"பகிரப்பட்ட அறைகூவல்கள் வலிமையின் ஆதாரங்களாக மாறக்கூடும் என்பதை ஆசியான் பிளஸ் த்ரீ அனுபவம் நிரூபிக்கிறது. இந்த வெளிச்சத்தில், நிலைத்தன்மையைப் பேணுவதற்கு இவை இன்றியமையாததாக இருப்பதால், நமது ஈடுபாட்டையும் ஒத்துழைப்பையும் நாம் தீவிரப்படுத்த வேண்டும்.

"எதிர்கால சுகாதார நெருக்கடிகளுக்கு சிறந்த தயார்நிலையை உறுதி செய்வதற்காக முன்மொழியப்பட்ட ஆசியான் பிளஸ் த்ரீ பொது சுகாதார அவசரநிலைகளுக்கான மருத்துவப் பொருட்கள் இருப்புடன்  (APTRMS) நாம் முன்னேற வேண்டும்," என்று அவர் இன்று ஆசியான் பிளஸ் த்ரீ APT உச்சிமாநாட்டின் தொடக்க உரையின் போது கூறினார்.

சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் செழிப்பு பகிர்ந்து கொள்ளப்படுவதற்காக, பிராந்திய ஒத்துழைப்பு வளர்ச்சி சமமாக  இருப்பதை உறுதி செய்வதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று அன்வார் கூறினார்.

கிழக்கு ஆசியாவிற்கு பிராந்தியத்தின் இளைஞர்கள், பெண்களை அதற்காக தயார்படுத்துவது அவசியம் என்று அவர் கூறினார்.

கிழக்கு ஆசியாவை நிலைத்தன்மை, வாய்ப்பு, நம்பிக்கையின் தொட்டிலாக வைத்திருக்கும் நோக்கத்துடன், APT கட்டமைப்பின் கீழ் தொடர்ச்சியான ஆக்கபூர்வமான ஈடுபாட்டை மலேசியா எதிர்நோக்குகிறது என்றும் பிரதமர் கூறினார்.

APT, சீன மக்கள் குடியரசு, ஜப்பான், கொரிய குடியரசுடன் சேர்ந்து ஆசியான் உறுப்பு நாடுகளை உள்ளடக்கிய ஒன்றாகும்.

ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset