நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

இந்த ஆண்டுக்குள் ஆசியான், இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது: டத்தோஸ்ரீ அன்வார்

கோலாலம்பூர்:

ஆசியான் தலைவராக மலேசியா, பொருளாதார உறவுகளை வலுப்படுத்தவும், வட்டாரத்தில் பகிரப்பட்ட செழிப்பை ஊக்குவிக்கவும் இந்த ஆண்டுக்குள் ஆசியான், இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய திட்டமிட்டுள்ளது.

மலேசியாவிற்கு மட்டுமல்ல, அனைத்து ஆசியான் உறுப்பு நாடுகளுக்கும் இந்தியா ஒரு முக்கிய பங்காளியாக உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

ஆசியான், இந்தியா உறவுகள் இப்போது பல்வேறு ஒத்துழைப்புத் துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டுகின்றன.

பல்வேறு பொருளாதாரத் துறைகளில் இந்தியாவின் விரைவான முன்னேற்றத்துடன், இந்தியா மற்றும் ஆசியான் ஆகிய இரு தரப்பினரும் நன்மைகளை உணருவார்கள் என்று நான் நம்புகிறேன்.

தற்போது, ​​எங்களிடம் ஆசியான், இந்தியா செயல் திட்டம் 2026–2030 உள்ளது.

இந்த ஆண்டுக்குள் ஆசியான், இந்தியா பொருட்கள் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வோம் என்று நாங்கள் நம்புகிறோம்.

இன்று நடைபெற்ற ஆசியான் இந்தியா உச்ச நிலை மாநாட்டில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset