நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

டிரம்ப் மலேசியாபால் ஈர்க்கப்பட்டுள்ளார்: அமெரிக்க தூதர்

கோலாலம்பூர்:

டிரம்ப் மலேசியாபால் ஈர்க்கப்பட்டுள்ளார் மலேசியாவுக்கான அமெரிக்க தூதர் எட்கார்ட் டி ககன் கூறினார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு மலேசியா அளித்த வரவேற்பு, அரவணைப்புக்காகப் பாராட்டினார்.

மேலும் இந்தப் பயணம் மலேசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளது.
இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நாம் இப்போது உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறோம். 

அமெரிக்க-மலேசியா உறவு சில முக்கியமான பகுதிகளில் ஒன்றிணைவதை நாம் காண்கிறோம் என்று நான் நினைக்கிறேன் என்று அவர் கூறினார்.

வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை இறுதி செய்யவும், 47ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாடு, தொடர்புடைய உச்சிமாநாடுகளுடன் இணைந்து கம்போடியா, தாய்லாந்து அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாவதைக் காணவும் அமெரிக்க அதிபர் கோலாலம்பூருக்கு வந்திருந்தார்.

நேற்று இங்கு ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ககன், டிரம்ப் மலேசியாவால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளதாக கூறினார்.

டிரம்ப் மலேசியாவைவிட்டுப் புறப்படுவதற்கு முன்பு  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் கூறிய ஒரு விஷயம் என்னவென்றால்,

மலேசியா எவ்வளவு சிறந்தது என்பதைக் காண முழு உலகமும் வாய்ப்பு பெற்றதில் அவர் மிகவும் மகிழ்ச்சியடைகிறார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset