நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

சீனாவுடன் வர்த்தக உடன்பாடு எட்டப்படும்: டொனால்ட் டிரம்ப் உறுதி 

கோலாலம்பூர்:

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சீனாவுடன் நல்லதொரு  வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

ஆசியான் கூட்டத்தை ஒட்டிச் சீன-அமெரிக்கத் தரப்புக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சீனா அரிய கனிமங்களுக்கு விதித்திருக்கும் கட்டுப்பாட்டை நீக்கும், அமெரிக்காவிடம் இருந்து அதிகமான சோயாபீன்ஸை (soybean) வாங்கும் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் (Scott Bessent) கூறினார்.

TikTokஇன் விற்பனை குறித்து இன்னும் சில விவரங்களை உறுதிசெய்ய வேண்டிருப்பதாக பெசன்ட் தெரிவித்தார். எனினும் இரு நாட்டு அதிபர்களும் தென்கொரியாவில் சந்திக்கும்போது உடன்பாடு ஏற்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

டிரம்ப்பும் சீன அதிபர் சி சின்பிங்கும் வரும் வியாழக்கிழமை தென்கொரியாவில் நடைபெறும் ஏப்பெக் (APEC) கூட்டத்தில் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் இருவருக்கும் இடையே நடக்கவிருக்கும் முதல் சந்திப்பு அது.

இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பை அமெரிக்கா உறுதிப்படுத்தியது, ஆனால் சீனா அதைப் பற்றி எதுவும் கூறவில்லை.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset