நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

வல்லரசு நாடுகளுடன் சமநிலையான உறவுகளைப் பேணுவதற்கான உறுதிப்பாட்டை ஆசியான் மீண்டும் வலியுறுத்துகிறது: பிரதமர்

கோலாலம்பூர்:

வல்லரசு நாடுகளுடன் சமநிலையான உறவுகளைப் பேணுவதற்கான உறுதிப்பாட்டை ஆசியான் மீண்டும் வலியுறுத்துகிறது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

ஆசியான், உலக வல்லரசுகளுடன், குறிப்பாக சீனா,  அமெரிக்காவுடன் சமநிலையான உறவுகளைப் பேணுவதற்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது.

இது வட்டாரத்தின் அதன் பல்வேறு சர்வதேச பங்காளிகளுடனான உறவுகளைத் தொடர்ந்து வலுப்படுத்தும் மையக் கொள்கைக்கு இணங்கும்.

ஆசியான் தலைவர்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதற்கான தொடர்ச்சியான அணுகுமுறையாகவும், வட்டாரத்தில் பொதுவான சவால்களை கூட்டாக எதிர்கொள்ளவும் உதவும்.

இரண்டு நாட்களுக்கு முன்பு நாங்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ஒரு சந்திப்பை நடத்தினோம். இன்று நாங்கள் சீனாவுடன் இருக்கிறோம்.

இது ஆசியானின் மையத்தன்மையை தெளிவாக பிரதிபலிக்கிறது.

மேலும் இந்த மையத்தன்மையையும் அனைத்து நாடுகளுடனும் நட்புறவையும் பராமரிப்பதில் ஆசியான் தலைமையின் ஞானத்திற்காக எனது ஒருமித்த பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset