செய்திகள் ASEAN Malaysia 2025
வட்டார கால்பந்து மேம்பாட்டிற்காக ஆசியான், பிபா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன
கோலாலம்பூர்:
வட்டார கால்பந்து மேம்பாட்டிற்காக ஆசியான், பிபா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் 47ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாடு நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக பிபா, ஆசியான் ஆகியவை வட்டார கால்பந்து மேம்பாடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நீட்டிப்பில் கையெழுத்திட்டன.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பிபா தலைவர் கியானி இன்பான்டினோ, ஆசியான் பொதுச் செயலாளர் காவ் கிம் ஹவுர்ன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இதற்கு ஆசியான் 2025 தலைவராக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சாட்சியாக இருந்தார்.
ஆசியான், பிபா.இடையேயான ஒத்துழைப்பு, விளையாட்டு மூலம் எதிர்கால சந்ததியினரை மேம்படுத்துவதற்கான ஒரு பகிரப்பட்ட பார்வையை பிரதிபலிக்கிறது என்று டத்தோஸ்ரீ அன்வார் தனது சுருக்கமான உரையில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 26, 2025, 9:56 pm
தென்கிழக்கு ஆசியாவுடன் அமெரிக்கா 100% ஆதராகவும் துணையாகவும் இருக்கும்: டிரம்ப்
October 26, 2025, 9:42 pm
கிழக்காசிய உச்ச நிலை மாநாட்டிற்காக சீனப் பிரதமர் லீ கியாங் மலேசியா வந்தடைந்தார்
October 26, 2025, 9:38 pm
கிழக்காசிய உச்ச நிலைமாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்ய துணைப் பிரதமர் மலேசிய வந்தடைந்தார்
October 26, 2025, 5:05 pm
டிரம்பின் 20 அம்ச காசா ஒப்பந்தத்திற்கு பிரதமர் அன்வார் பாராட்டு
October 26, 2025, 3:45 pm
தாய்லாந்து, கம்போடியா அமைதி முயற்சிகளுக்கு முன்னோடியாக இருந்த டத்தோஸ்ரீ அன்வாரை டிரம்ப் பாராட்டினார்
October 26, 2025, 2:45 pm
