நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

கிழக்காசிய உச்ச நிலை மாநாட்டிற்காக சீனப் பிரதமர் லீ கியாங் மலேசியா வந்தடைந்தார்

கோலாலம்பூர்:

கிழக்காசிய உச்ச நிலை மாநாட்டிற்காக சீனப் பிரதமர் லீ கியாங் மலேசியா வந்தடைந்தார்.

கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு 47ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாடு, தொடர்புடைய உச்ச நிலை மாநாடுகளுடன் இணைந்து 20ஆவது கிழக்காசிய உச்ச நிலை மாநாடும் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீனப் பிரதமர் லீ கியாங் மலேசியாவை வந்தடைந்தார்.

லீ அவரது குழுவினரை ஏற்றிச் சென்ற சிறப்பு விமானம் மாலை 4.17 மணிக்கு கேஎல்ஐஏ பூங்கா ராயா வளாகத்தில் தரையிறங்கியது, 

போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அவரை வரவேற்றார்.

பின்னர் ராயல் மலாய் படைப்பிரிவின் 1ஆவது பட்டாலியனின் 28 அதிகாரிகள், பணியாளர்கள் அடங்கிய மரியாதை அணிவகுப்பை லீ பார்வையிட்டார்.

சீன வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, அவர் 28ஆவது ஆசியான் பிளஸ் த்ரீ உச்ச நிலை மாநாடு, ஐந்தாவது வட்டார விரிவான பொருளாதார கூட்டாண்மை தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதோடு கூடுதலாக நாளை மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset