நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

கிழக்காசிய உச்ச நிலைமாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்ய துணைப் பிரதமர் மலேசிய வந்தடைந்தார்

சுபாங்:

கிழக்காசிய உச்ச நிலைமாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்ய துணைப் பிரதமர் மலேசிய வந்தடைந்தார்.

2025ஆம் ஆண்டு ஆசியான் தலைவராக மலேசியா நடத்தும் 47ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாடு தொடர்புடைய உச்ச நிலை மாநாடுகளுடன் இணைந்து ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்ஸி ஓவர்சுக் இங்கு வந்துள்ளார்.

ஓவர்சுக், துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி ருடென்கோ உள்ளிட்ட தூதுக் குழுவை ஏற்றி வந்த சிறப்பு விமானம் மாலை 5 மணிக்கு இங்குள்ள ராயல் மலேசிய விமானப்படை தளமான சுபாங்கில் தரையிறங்கியது.

சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சூல்கிப்லி அஹ்மத் அவர்களை வரவேற்றார்.

கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நாளை நடைபெறும் 20ஆவது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் ஓவர்சுக் கலந்து கொள்ள உள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset