நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

டிரம்பின் 20 அம்ச காசா ஒப்பந்தத்திற்கு பிரதமர் அன்வார் பாராட்டு

கோலாலம்பூர்:

காசா மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 20 அம்ச அமைதித் திட்டத்தை ஆசியான் வரவேற்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார்.

ஆசியான்-அமெரிக்க உச்சிமாநாட்டில் பேசிய அன்வார், டிரம்பின் தலைமை காசாவிலும் உலகிலும் "நீதியான, நீடித்த அமைதிக்கு" வழி வகுக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாக கூறினார்.

“காசாவைப் பொறுத்தவரை, காசா மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உங்கள் விரிவான திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம்.

“இது மிகவும் கடினமான மோதல்களிலும் கூட, ராஜதந்திரமும் உறுதியும் மேலோங்க முடியும் என்ற நம்பிக்கையை உலகிற்கு அளித்துள்ளது,” என்று அன்வர் இன்று இங்குள்ள கேஎல் கன்வென்ஷன் சென்டரில் நடந்த உச்சிமாநாட்டில் கூறினார்.

கடந்த மாதம், வெள்ளை மாளிகையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து டிரம்ப் தனது 20 அம்ச அமைதித் திட்டத்தை அறிவித்தார், அவரது ஐரோப்பிய சகாக்கள் மட்டுமல்லாமல் பெரும்பாலான அரபு நாடுகளின் ஆதரவையும் டிரம்ப் பெற்றார்.

இந்தத் திட்டம் காசாவை தீவிரவாதமற்ற பயங்கரவாதம் இல்லாத மண்டலமாக அறிவிக்கவும், அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் திருப்பி அனுப்பிய பிறகு ஹமாஸ் தங்கள் ஆயுதங்களை அகற்றவும், காசாவின் நிர்வாகத்தில் எந்தவொரு பங்கையும் கைவிடவும் முயல்கிறது.

இதுவரை, அக்டோபர் 22 ஆம் தேதி நிலவரப்படி, ஹமாஸ் அனைத்து உயிருள்ள பணயக்கைதிகளையும் விடுவித்து, இறந்த 28 பணயக்கைதிகளில் 15 பேரின் உடல்களை திருப்பி அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset