செய்திகள் ASEAN Malaysia 2025
தாய்லாந்து, கம்போடியா அமைதி முயற்சிகளுக்கு முன்னோடியாக இருந்த டத்தோஸ்ரீ அன்வாரை டிரம்ப் பாராட்டினார்
கோலாலம்பூர்:
தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான அமைதி முயற்சிகளுக்கு முன்னோடியாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முக்கிய பங்கு வகிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டினார்.
மலேசியா ஒரு பெரிய பொறுப்பை ஏற்றுக் கொண்டது.
பதட்டங்களைத் தணிக்க இரு நாடுகளின் தலைவர்களையும் உடனடியாக புத்ராஜெயாவில் ஒரு சந்திப்பை நடத்த அழைத்தது.
முன்னதாக மோதல் வெடித்தவுடன் அன்வாரை தொடர்பு கொண்டதாகவும், பிரச்சினையைத் தீர்ப்பதில் மலேசியா மூன்றாவது, நடுநிலை நாடாகப் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்ததாகவும் டிரம்ப் கூறினார்.
கம்போடியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையே நெருக்கடி ஏற்பட்டபோது, நான் உடனடியாக அன்வாரைத் தொடர்பு கொண்டு, இந்த மோதலைத் தீர்க்க முடிந்தால் நான் உங்கள் நாட்டிற்கு வருவேன் என்றேன். இன்று அதை நிரூபித்துள்ளேன்.
இன்று கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 47ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாட்டுடன் இணைந்து தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடும் விழாவில் அவர் இவ்வாறு பேசினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 26, 2025, 5:05 pm
டிரம்பின் 20 அம்ச காசா ஒப்பந்தத்திற்கு பிரதமர் அன்வார் பாராட்டு
October 26, 2025, 2:45 pm
ASIEAN 2025: தாய்லாந்தும், கம்போடியாவும் கோலாலம்பூர் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன
October 26, 2025, 1:34 pm
KLIA விமான நிலையத்தில் டிரம்பின் தன்னிச்சையான நடனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது
October 26, 2025, 11:07 am
திமோர் லெஸ்தே இப்போது ஆசியானின் 11ஆவது உறுப்பினராக இணைந்துள்ளது
October 26, 2025, 10:24 am
ஆசியான் உச்சி மாநாட்டிற்காக டிரம்ப் மலேசியா வந்தடைந்தார்
October 26, 2025, 10:10 am
