நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

ASIEAN 2025: காசாவில் மோதலைத் தீர்க்க "நிறைய பேரை" நியமித்துள்ளேன்; எட்டு மாதங்களில் எட்டு போர்களை முடிவுக்குக் கொண்டு வந்தேன்: டிரம்ப் பெருமிதம்

கோலாலம்பூர்:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதிலிருந்து எட்டு மாதங்களில் எட்டு போர்களை தனது நிர்வாகம் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக இன்று பெருமைப்பட கூறினார். இது அவரது முன்னோடிகள் யாரும் சாதிக்காத சாதனை என்று அவர் கூறினார்.

ஆசியான் உச்சி மாநாடு 2025 பேசிய டிரம்ப், காசாவில் மோதலைத் தீர்க்க "நிறைய பேரை" தாம் நியமித்துள்ளதாகக் கூறினார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அவரது ராணுவத் தலைவர் அசிம் முனீர் ஆகியோருடனான தனது வலுவான உறவுகளை மேற்கோள் காட்டி, ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடந்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் அவர் நம்பிக்கையுடன் இருப்பதாகத் தோன்றியது.

"அமெரிக்காவின் சார்பாக, இந்த மோதலைத் தீர்த்து, பெருமைமிக்க, சுதந்திரமான நாடுகளின்  பாதுகாப்பு,  அமைதியில் செழித்து வளரக்கூடிய இந்த பிராந்தியத்திற்கான எதிர்காலத்தை உருவாக்க உதவுவதில் நான் பெருமைப்படுகிறேன்" என்று டிரம்ப் கேஎல் அமைதி ஒப்பந்த கையெழுத்து விழாவில் கூறினார்.

அமைதி ஒப்பந்தத்திற்காக இன்று தனது தாய்லாந்து கம்போடிய சகாக்களை இங்கு கூட்டியதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிமுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

ஜூலை மாதம் தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படவும், இன்று கோலாலம்பூர் அமைதி ஒப்பந்தம் ஏற்படவும் வழிவகுத்த மூன்று தலைவர்களுடனும் தான் அடிக்கடி தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாக டிரம்ப் கூறினார்.

தனது உரையின் போது, ​​கம்போடியாவுடன் அமெரிக்கா "ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்தையும் தாய்லாந்துடன் "ஒரு முக்கியமான கனிம ஒப்பந்தத்தையும் கையெழுத்திடும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.

79 வயதான டிரம்ப் தாம் கோல்ஃப் விளையாடுவதை விட மோதல்களைத் தீர்ப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும், இதேபோன்ற முயற்சிகளை தீவிரமாக முன்னெடுத்துச் செல்ல ஐக்கிய நாடுகள் சபைக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவர் கூறினார்.

"மக்களைக் காப்பாற்றுதல், நாடுகளைக் காப்பாற்றுதல், இரத்தக்களரியைத் தடுத்தல், போர்களுக்குப் பதிலாக செழிப்புடன்  அமைதியின் பாதையைத் தேர்வு செய்ய வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

இன்று முன்னதாக, கம்போடிய பிரதமர் ஹன் மானெட், தாய் பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் ஆகியோர் கோலாலம்பூர் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை அன்வாரும் டிரம்பும் பார்வையிட்டனர். அண்டை நாடுகளிடையே பல மாதங்களாக நீடித்த எல்லை பதற்றங்களைத் தணிப்பதாக இரு நாட்டுத் தலைவர்களும் உறுதியளித்தனர்.

எல்லை மோதலில் இரு தரப்பிலும் 40 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சுமார் 300,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

கையெழுத்து விழாவிற்குப் பிறகு, ஹன் மானெட், சமாதான ஒப்பந்தத்தை எளிதாக்குவதில் அன்வர், டிரம்பின் பங்கிற்கு நன்றி தெரிவித்தார், மேலும் டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்படுவதற்கு கம்போடியாவின் ஆதரவைக் கூறினார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதிலிருந்து டிரம்ப் இந்த விரும்பத்தக்க விருதைப் பெற முயற்சித்து வருகிறார், ஆர்மீனியா, அஜர்பைஜான், பாகிஸ்தான் போன்ற நாடுகள் அவரது முயற்சியை ஆதரித்தன.

மூன்று அமெரிக்க ஜனாதிபதிகள் நோபல் பரிசை வென்றுள்ளனர். ஆனால் அதை வென்ற ஒரே குடியரசுக் கட்சிக்காரர் 1906 இல் தியோடர் ரூஸ்வெல்ட் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset