நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

ASIEAN 2025: தாய்லாந்தும், கம்போடியாவும் கோலாலம்பூர் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன

கோலாலம்பூர்:

தாய்லாந்தும் கம்போடியாவும் இன்று தங்கள் பகிரப்பட்ட எல்லையில் போர்நிறுத்தத்தைப் பேணுவதற்கான முதற்கட்ட அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

ஆசியான் அமைப்பின் தலைவராக மலேசியாவும் அமெரிக்க அதிபர் டிரமப் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் இது நடந்தது.

கோலாலம்பூர் ஒப்பந்தம் என்பது இரு நாடுகளும் உடனடியாக விரோதப் போக்கை நிறுத்துவது. மேலும் மோதல் மண்டலத்திலிருந்து கனரக ஆயுதங்களைத் திரும்பப் பெறுவது, கூட்டு கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளைத் தொடங்கவும் உறுதிபூண்டுள்ளன என்பதைக் காட்டுகிறது.

கடந்த ஜூலை மாதம் இரு அண்டை நாடுகளுக்கும் இடையே பதற்றங்கள் வெடித்தன.

இது பல ஆண்டுகளாக பனிப்போர் மன நிலையில் இருந்த இரு நாடுகளுக்கிடையே மிக மோசமான இரத்தக்களரியான சண்டைக்கு வழிவகுத்தது.

இதில் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 300,000 பேர் தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இரு தரப்பினரும் முதலில் ஜூலை 28 அன்று போர்நிறுத்தத்தை அமல்படுத்த ஒப்புக்கொண்டனர், இதற்கு மலேசியா அமெரிக்க ஆதரவுடன் முழு வீச்சில் செயலாற்றியது.

ஆனால் ஒப்பந்த மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் அன்றிலிருந்து தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset