செய்திகள் ASEAN Malaysia 2025
KLIA விமான நிலையத்தில் டிரம்பின் தன்னிச்சையான நடனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது
சிப்பாங்:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மலேசியாவுக்கு வந்தவுடன், உள்ளூர் பாரம்பரிய நடனக் கலைஞர்களுடன் தன்னிச்சையாக நடனமாடி அனைவரையும் கவர்ந்தார்.
டிரம்பை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விமான நிலையத்திற்கு சென்று சிறப்பாக வரவேற்றார்.
மேலும் வரவேற்பின் அடையாளமாக மலேசிய கலாச்சார நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.
ஏர் ஃபோர்ஸ் ஒன், போயிங் 747-200பி விமானத்திலிருந்து இறங்கிய அவர், சிரித்துக் கொண்டே நடனக் கலைஞர்களின் தாளத்தைப் பின்பற்றுவதைக் காண முடிந்தது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைக் காண வந்திருந்த கூட்டத்தினரிடமிருந்து இந்த நடவடிக்கை ஆரவாரத்தையும் கைதட்டலையும் பெற்றது.
அதன் பின்னர் நடனக் கலைஞர்களுக்கு தனது பாராட்டைத் தெரிவிக்கும் விதமாக சல்யூட் வைத்தார்.
தொடர்ந்து அவரிடம் மலேசியக் கொடியும் அமெரிக்கக் கொடியும் தரப்பட்டது. அதனை வாங்கிக் கொண்டு சிறிது நேரம் அசைத்துக் காட்டினார்.
இறுதியாக அமெரிக்க அதிபரும் பிரதமர் அன்வார் இப்ராஹிமும் ஒரே காரில் விமான நிலையம் விட்டுப் புறப்பட்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 26, 2025, 3:45 pm
தாய்லாந்து, கம்போடியா அமைதி முயற்சிகளுக்கு முன்னோடியாக இருந்த டத்தோஸ்ரீ அன்வாரை டிரம்ப் பாராட்டினார்
October 26, 2025, 2:45 pm
ASIEAN 2025: தாய்லாந்தும், கம்போடியாவும் கோலாலம்பூர் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன
October 26, 2025, 11:07 am
திமோர் லெஸ்தே இப்போது ஆசியானின் 11ஆவது உறுப்பினராக இணைந்துள்ளது
October 26, 2025, 10:24 am
ஆசியான் உச்சி மாநாட்டிற்காக டிரம்ப் மலேசியா வந்தடைந்தார்
October 26, 2025, 10:10 am
உலகத் தலைவர்கள் முன்னிலையில் வரலாற்று சிறப்புமிக்க ஆசியான் உச்சிமாநாட்டை அன்வார் KL இல் தொடங்கி வைத்தார்
October 25, 2025, 3:08 pm
