நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

திமோர் லெஸ்தே இப்போது ஆசியானின் 11ஆவது உறுப்பினராக இணைந்துள்ளது

கோலாலம்பூர்:

திமோர் லெஸ்தே  இன்று ஆசியானில் அதிகாரப்பூர்வமாக இணைந்தது.

47ஆவது ஆசியான் உச்சி மாநாட்டில் இணைவதற்கான பிரகடனத்தில் கையெழுத்திட்ட பிறகு தென்கிழக்கு ஆசிய கூட்டமைப்பின் 11ஆவது உறுப்பினராக மாறியது.

10 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் வரலாற்றுச் சிறப்புமிக்க பிரகடனத்தில் கையெழுத்திட்டனர்.

திமோர் லெஸ்தேவின் பிரதமர் கே ராலா சனானா குஸ்மாவோ இறுதி கையொப்பமிட்டவராக இருந்தார்.

விழாவிற்குப் பிறகு திமோர் லெஸ்தே  கொடி மேடையில் மற்ற உறுப்பு நாடுகளுடன் ஏற்றப்பட்டது.

இது கூட்டணியில் அதன் அதிகாரப்பூர்வ நுழைவைக் குறிக்கிறது.

உச்ச நிலை மாநாட்டின் தொடக்கத்தில் ஆசியான் தலைவராகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தனது உரையில், 

திமோர் லெஸ்தேவின் நுழைவு ஆசியான் குடும்பத்தை நிறைவு செய்கிறது.

நமது பகிரப்பட்ட எதிர்காலத்தையும் பிராந்திய குடும்ப உறவுகளையும் இது மேலும் வலுப்படுத்துகிறது என்று கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset