நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

உலகத் தலைவர்கள் முன்னிலையில் வரலாற்று சிறப்புமிக்க ஆசியான் உச்சிமாநாட்டை அன்வார் KL இல் தொடங்கி வைத்தார்

கோலாலம்பூர்: 

கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் 47வது ஆசியான் உச்சி மாநாட்டின் தொடக்க விழாவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தொடங்கி வைத்தார். 

இது மலேசியாவின் ஆசியான் தலைமைத்துவத்தில் 2025 இன் கீழ் மூன்று நாட்கள் உயர்மட்டக் கூட்டங்களின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

ஆசியான் தலைவர்கள், அமைச்சர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்ட விழா, ஆசியான் தலைவராக அன்வாரின் தொடக்க உரையுடன் தொடங்கியது.

அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென் கொரியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நாட்டுத் தலைவர்கள், அரசுத் தலைவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

"உள்ளடக்கம், நிலைத்தன்மை" என்ற தலைப்பின் கீழ் பிராந்திய அமைதி, பொருளாதார மீள்தன்மையை உள்ளடக்கிய வளர்ச்சி குறித்த விவாதங்களில் பல நாட்டுத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

புருனை சுல்தான் ஹசனல் போல்கியா, கம்போடிய பிரதமர் ஹுன் மானெட், இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், லாவோ பிரதமர் சோனெக்ஸே சிபாண்டன், பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் வியட்நாம் பிரதமர் ஃபாம் மின் சின் ஆகியோர் இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

இதற்கிடையில், உயர்மட்டக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனப் பிரதமர் லி கியாங், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, தென்னாப்பிரிக்க அதிபர் மதமேலா சிரில் ராமபோசா, கனேடிய பிரதமர் மார்க் கார்னி, ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

ஆசியானின் 11வது உறுப்பு நாடாக நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்கேற்பைக் குறிக்கும் வகையில், திமோர்-லெஸ்டேவின் அதிபர் ஜோஸ் ராமோஸ்-ஹோர்டா,  பிரதமர் கே ராலா சனானா குஸ்மாவோ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset