நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் குறைந்தது கோவிட் 19 நோய்த்தொற்று: இன்று  743 பேருக்கு மட்டுமே தொற்று உறுதிசெய்யப்பட்டது: சிங்கப்பூர் சுகாதாரத்துறை 

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் புதிதாக 743 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சுகாதார நோய்த்தொற்று பணிக்குழு அறிவித்துள்ளது.

செப்டம்பர் 13ஆம் தேதிக்குப் பிறகு பதிவாகியுள்ள ஆகக் குறைவான தினசரி எண்ணிக்கை இதுவாகும்.

* உள்ளூர் அளவில் பாதிக்கப்பட்டவர்கள்: 731

* சமூக அளவில் பாதிக்கப்பட்டவர்கள்: 707

* வெளிநாட்டு ஊழியர் விடுதியைச் சேர்ந்தவர்கள்: 24

* வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள்: 12

* சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மொத்தம் : 268,659

* வாராந்திர நோய்த்தொற்று அதிகரிப்பு விகிதம்: 0.63

சென்ற மாதம் 13ஆம் தேதியிலிருந்து வாராந்திரக் கிருமித்தொற்று விகிதம் ஒன்றுக்குக் கீழ் பதிவாகியுள்ளது.

வாரந்தோறும் பதிவாகும் புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை அது குறிக்கின்றது.

வாராந்திர நோய்த்தொற்று அதிகரிப்பு விகிதம் என்பது கடந்த ஒரு வாரத்திலும் அதற்கு முந்திய வாரத்திலும் சமூக அளவில் பதிவான தொற்றுச் சம்பவங்களுக்கு இடையிலான விகிதம். 

தொடர்புடைய செய்திகள்

+ - reset