செய்திகள் இந்தியா
ம.பி.: தீபாவளி துப்பாக்கியால் பார்வை பாதிக்கப்பட்ட 100 பேர்
போபால்:
மத்திய பிரதேசத்தின் போபால், இந்தூரில் தீபாவளியின்போது கார்பைடு துப்பாக்கிகளை வெடித்த போது பார்வை பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிக்கு தற்போது இந்தூரில் தடை விதிக்கப்பட்டு்ள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 8 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளாவர். போபாலில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 60 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விதிஷாவில் உள்ள மருத்துவமனைகளில் 50 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கார்பைடு குழாய் துப்பாக்கிகள் மிகவும் ஆபத்தானவை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கண்ணில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக ஒரு குழந்தைக்கு கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கேஸ் லைட்டர் பொருத்தப்பட்ட பிளாஸ்டிக் குழாய்களில் கால்சியம் கார்பைடு ரசாயனத்தை அடைத்து இந்த வகையான துப்பாக்கி தயாரிக்கப்படுகிறது.
கால்சியம் கார்பைடு நீருடன் வேதிவினைசேரும்போது அசிட்டிலீன் என்னும் வாயு உருவாகி தீப்பொறி ஏற்பட்டு பெரும் சப்தத்துடன் வெடிக்கிறது. அப்போது சிறிய பிளாஸ்டிக் துகள்கள் துப்பாக்கியை வைத்திருக்கும் நபரின் கண்கள், முகம், தோல் பகுதியில் பட்டு பலத்த காயத்தை ஏற்படுத்துகின்றன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 28, 2026, 12:26 pm
DATING.COM நிறுவனத்தின் புதிய முயற்சி: சீஃப் பிரேக்கப் ஆபீசர்' வேலைவாய்ப்பு
July 27, 2026, 3:30 pm
ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்காத சினிமா பிரபலங்கள் கோழைகள்: இணையவாசிகள் கடும் கோபம்
July 26, 2026, 6:32 pm
நீட் வினாத்தாள் கசிவு முதல்... அமைச்சர் ராஜினாமா வரை: இந்திய அரசை உலுக்கிய இளைஞர் படை
July 25, 2026, 10:50 am
