நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

ஆசியான் உச்ச நிலை மாநாட்டிற்கு முன்னதாக பிரேசில் அதிபர் லூலாவுக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது

புத்ராஜெயா:

47ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாடு, தொடர்புடைய இதர மாநாடுகளில் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்ளும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவின் மலேசியா பயணத்துடன் இணைந்து இன்று பெர்டானா புத்ரா வளாகத்தில் அவருக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.

லூலா, அவரது மனைவி ஜன்ஜா லுலா டா சில்வாவுடன் காலை 9 மணிக்கு வந்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அவரது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் ஆகியோர் அவரை வரவேற்றனர்.

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, பிற அமைச்சரவை உறுப்பினர்களும் விழாவில் கலந்து கொண்டனர்.

டத்தாரான் பெர்டானா புத்ராவில் நடந்த விழா, இரு நாடுகளின் தேசிய கீதங்களையும் இசைத்ததன் மூலம் தொடங்கியது.

விழாவைத் தொடர்ந்து இரு தலைவர்களும் இருதரப்பு சந்திப்பிற்காக ஸ்ரீ பெர்டானா வளாகத்திற்கு ஒன்றாக பயணம் செய்தனர்.

மலேசியா-பிரேசில் இருதரப்பு உறவுகளின் முன்னேற்றத்தை இரு தலைவர்களும் மதிப்பாய்வு செய்வார்கள்.

மேலும் வர்த்தகம், முதலீடு, அறிவியல், தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஹலால் தொழில், விவசாயம், சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை ஆராய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset