நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

நடுநிலைமைக்கான இடம் குறுகி வருகிறது; ஆசியான் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: முஹம்மத் ஹசான்

கோலாலம்பூர்:

நடுநிலைமைக்கான இடம் குறுகி வருவதால் ஆசியான் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் இதனை கூறினார்.

பல்வேறு துறைகளில் வல்லரசு நாடுகளின் போட்டி தீவிரமடைந்து வருவதால், ஆசியானின் நடுநிலை, மையத்திற்கான இடம் சுருங்கி வருகிறது.

ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் தலைவராக தனது தொடக்க உரையில், வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு ஆகியவற்றில் போட்டி ஆழமடைவதால், பிராந்திய கூட்டமைப்பு உறுதியுடனும் ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும் என்றார் அவர்.

அனைத்துலக நிலப்பரப்பு ஒருமித்த கருத்துக்கு பதிலாக எதிர்ப்பாலும், உரையாடலுக்கு பதிலாக பிரிவினையாலும் ஆதிக்கம் செலுத்தப்படுவதால், ஆசியான் ஒரு மாறுப்பட்ட வழியில் உள்ளது.

ஆக நாம் குரல் கொடுப்பவர்களாக மட்டும் அல்ல. தீமைக்கு எதிரான குரலாகத் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset