நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

47ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாட்டிற்காக புரூணை சுல்தான் மலேசியாவுக்கு வருகை

சிப்பாங்:

47ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு, தொடர்புடைய இதர மாநாடுகளில் கலந்து கொள்வதற்காக புரூனே சுல்தான் சுல்தான் ஹஸ்னால் போல்கியா இன்று மலேசியாவை வந்தடைந்தார்.

அவரையும் இளவரசர் அப்துல் மதீன் போல்கியா உள்ளிட்ட புருனே பிரதிநிதிகளையும் ஏற்றிச் சென்ற சிறப்பு விமானம் மாலை 6.30 மணிக்கு சுபாங்கில் உள்ள ராயல் மலேசிய விமானப்படை தளத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காதிர் அவரை வரவேற்றார்.

ஆசியான் உறுப்பு நாடுகளிடையே வட்டார ஒத்துழைப்பு, ஒற்றுமையை வலுப்படுத்துவதில் புரூணை கொண்டுள்ள உறுதியான உறுதிப்பாட்டை சுல்தான் ஹஸ்னால் போல்கியா உச்சநிலை மாநாட்டிற்கான இந்த  வருகை  நிரூபிக்கிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset