நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் அதிபர் மலேசியா வந்தடைந்தார்

சிப்பாங்:

47ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாடுடன் இணைந்து ஆசியான் தலைமைத்துவத்தின் விருந்தினராக மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணமாக பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா மலேசியாவிற்கு வந்தடைந்தார்.

லூலா, அவரது மனைவி ஜன்ஜா லுலா டா சில்வா, தூதுக்குழுவை ஏற்றிச் சென்ற சிறப்பு விமானம் இன்று மாலை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் உள்ள புங்கா ராயா வளாகத்தில் தரையிறங்கியது.

மேலும் தோட்ட, மூலப் பொருட்கள் அமைச்சர் டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கானி அவரை வரவேற்றார்.

பின்னர் கேப்டன் முகமது மஸ்ரூர் ஹிதாயத் மஸ்ரி தலைமையிலான ராயல் மலாய் படைப்பிரிவின் 1ஆவது பட்டாலியனின் 28 அதிகாரிகள், பணியாளர்கள் அடங்கிய மரியாதை அணிவகுப்பை லூலா ஆய்வு செய்தார்.

2023 ஜனவரியில் புதிய பதவிக் காலத்திற்கு பதவியேற்ற பிறகு லூலாவின் முதல் அதிகாரப்பூர்வ வருகை இதுவாகும் என விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையில் கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset