நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்

பாட்னா: 

பிகார் பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதை பாட்னாவில் கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டாக அறிவித்தனர்.
243 உறுப்பினர்களைக் கொண்ட பிகார் சட்டப் பேரவைக்கு நவ.6, 11 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது.

பாட்னாவில் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வியின் பெயரை அசோக் கெலாட் அறிவித்தார்.

துணை முதல்வராக இந்தியா கூட்டணியின் விகாஸ்ஷீல் இன்சான் கட்சித் தலைவர் முகேஷ் சஹானியையும் அசோக் கெலாட் அறிவித்தார்.

மேலும் சிலருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று கெலாட் தெரிவித்தார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset