
செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் கைபேசி குறுந்தகவல் செயலிகளின் மூலம் போதைப்பொருள் பரிமாற்றம்: 50 பேர் கைது
சிங்கப்பூர்:
கைபேசி குறுந்தகவல் செயலிகளின் மூலம் போதைப்பொருள் பரிமாற்றத்தில் ஈடுபட்ட 50 பேர் சிங்கப்பூர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
கடந்த இரு வாரங்களாக சிங்கப்பூர் முழுவதும் பரவலாக போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பல்வேறு குறுந்தகவல் செயலிகளைப் பயன்படுத்தி போதைப்பொருள்களை வாங்கியதாக சந்தேகிக்கப்படும் நபர்களை அவர்கள் வளைத்துப் பிடித்தனர்.
கைதானவர்களில் ஒருவர் டெலிகிராம் குறுந்தகவல் செயலியைப் பயன்படுத்தி போதைப்பொருள் வாங்கியது தெரிய வந்தது. போலிசார் தன்னைக் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக அவர் மேற்கொண்ட தந்திரங்களையும் மீறி நவம்பர் 16ஆம் தேதி போலிசார் அவரை மடக்கினர். அவரது வீட்டில் இருந்து பல்வேறு பொருள்களைக் கைப்பற்றி உள்ளனர்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டபோது, வீட்டில் இருந்து அவரது தந்தை, தன் மகன் தவறு செய்திருந்தால் தண்டனை அனுபவிக்கத்தான் வேண்டும் என்று கூறினார்.
முன்னதாக, கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி நடப்பாண்டு செப்டம்பர் 17ஆம் தேதி வரை இவ்வாறு குறுந்தகவல் மூலம் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட 77 பேர் சிங்கப்பூர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், போதைப்பொருளுக்கு 154 பேரை போலிசார் பிடித்தனர். கைதானவர்களில் 70 விழுக்காட்டினர் 30 வயதுக்கும் குறைவானவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
போலிசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின்போது செய்தியாளர்களும் உடனிருக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
August 20, 2022, 12:50 pm
விமானத்தில் தூங்கியதால் விமான நிலையத்தை தவற விட்ட பைலட்டுகள்
August 19, 2022, 5:51 pm
இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதல்: 3 பேர் பலி
August 18, 2022, 4:48 pm
கோத்தபய ராஜபட்ச 24-இல் நாடு திரும்புகிறார்
August 17, 2022, 8:40 pm
இலங்கை வந்தடைந்த கப்பல் குறித்து சீனா விளக்கம்
August 16, 2022, 8:45 pm
சல்மான் ருஷ்டி தாக்குதலில் தொடர்பா?: ஈரான் மறுப்பு
August 16, 2022, 7:35 pm
ஆண்டு இறுதிக்குள் சிங்கப்பூரில் பணவீக்கம் உச்சத்தை அடையும்: துணைப் பிரதமர் வோங்
August 16, 2022, 5:27 pm
இலங்கை வந்தது சீன உளவு கப்பல்: இந்தியா வழங்கியது இலவச ரோந்து விமானம்
August 14, 2022, 6:17 pm
டிரம்ப் இல்லத்திலிருந்து ரகசிய அரசு ஆவணங்கள் பறிமுதல்
August 14, 2022, 5:24 pm