நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பேங்காக்கில் இரவு நேரச் சந்தையில் தீ விபத்து: 48 கடைகள் சேதம்

பேங்காக்:

சாட்டுசாக் வார இறுதி சந்தையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 48 கடைகள் முற்றிலும் எரிந்து நாசமாயினதாக தாய்லாந்து தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.

இரவு 10.42 மணிக்கு ‘ப்ராஜெக்ட் 17’ பகுதியில் தீ பரவத் தொடங்கி, தகர கூரையுடன் இருந்த ஒரே மாடி கடைகள் வரிசையாக தீக்கிரையானது.

தீயணைப்பு குழு உதவி பிரிவுகளுடன் விரைந்து வந்து, 40 நிமிடங்களுக்குள் தீயைக் கட்டுப்படுத்தி 11.15 மணிக்கு முழுமையாக அணைத்தனர்.

சுமார் 240 சதுர மீட்டர் பரப்பளவு பாதிக்கப்பட்டதுடன், அனைத்து 48 கடைகளும் கடுமையாக சேதமடைந்தன. சந்தை மூடப்பட்டிருந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

முதற்கட்ட விசாரணையில் மின்சார கோளாறின் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இருப்பினும், உண்மையான காரணமும் மொத்த இழப்பும் குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.           

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset