நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தாய்லாந்து தேர்தலில் பூமிஜேதாய் கட்சி மகத்தான வெற்றி

பேங்காக்:

தாய்லாந்துப் பொதுத் தேர்தலில் பிரதமர் அனுட்டின் சார்ன்விராகூனின் (Anutin Charnvirakul) பூமிஜேதாய் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு வருகின்றது.

நாடாளுமன்றத்தின் 500 இடங்களில் 192 இடங்களைப் பூமிஜேதாய் கட்சி கைபற்றியுள்ளதாகத் தாய்லாந்து தேர்தல் ஆணையம் முதல்கட்டமாக தெரிவித்துள்ளது.

இதுவரை 95 விழுக்காட்டு வாக்களிப்பு நிலையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டுவிட்டன.

தாய்லந்தின் மக்கள் கட்சி 117 இடங்களில் வென்றுள்ளது.

பியூ தாய் (Pheu Thai) கட்சிக்கு 74 இடங்கள் கிடைத்துள்ளன.

இது மக்களின் தெளிவான முடிவைக் காட்டுவதாக பிரதமர் அனுட்டின் கூறியுள்ளார்.

கட்சியின் வெற்றி மட்டுமல்ல மக்களின் வெற்றி என்று அவர் சொன்னார்.

மற்ற கட்சிகளுடன் சேர்ந்து பணியாற்ற அவர் விருப்பம் தெரிவித்தார்.

ஆதாரம்: Reuters

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset