நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நியூயார்க் நகரில் கடும் குளிர்: 18 பேர் பலி

நியூயார்க்:

கடும் குளிர் அலை காரணமாக நியூயார்க் நகரில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக மேயர் ஜோஹ்ரான் மம்தானி தெரிவித்தார்.

ஜனவரி இறுதியில் இருந்து நகரம் நீண்ட குளிர் காலத்தை எதிர்கொண்டு வருவதுடன், தொடர்ந்து 13 நாட்கள் 0° செல்சியஸ் அல்லது அதற்கு குறைவான வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது கடந்த அறுபது ஆண்டுகளில் மிக நீண்ட காலமாகும்.

கடந்த வார இறுதியில் மேலும் ஒருவர் தெருவில் உயிரிழந்ததாகக் கூறிய அவர், ஒவ்வொரு மரணமும் பெரும் துயரம் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நகராட்சி உதவிகளைத் தொடரும் என்றும் வலியுறுத்தினார்.

அமெரிக்க தேசிய வானிலை சேவை, இந்த வாரம் முழுவதும் வெப்பநிலை 0° செல்சியஸ் அருகிலேயே இருக்கும் என்றும், ஆர்க்டிக் காற்று காரணமாக உடல் உறைபனி , உறைபுண் அபாயம் நீடிக்கும் என்றும் எச்சரித்துள்ளது. நகரின் அவசர முகாமைத்துறை, கட்டிடங்களில் இருந்து விழக்கூடிய பனி, இரவில் மீண்டும் உறையக்கூடிய சாலைகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset