செய்திகள் உலகம்
பாகிஸ்தான் பள்ளிவாசலில் தற்கொலை படை தாக்குதல்: 69 பேர் பலி: 169-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பள்ளிவாசலில் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 69 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில் ஷியா சமூகத்தினர் சுமார் 20 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இது பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் 10-12 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இஸ்லாமாபாத்தின் ஷேசாத் பகுதியில் உள்ள இமாம்பர்காஹ் என்ற ஷியா சமூகத்தினர் கூடும் மண்டபத்தில் வழக்கம் போல் மக்கள் கூடியிருந்தனர்.
பக்ளிவாசலில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின்போது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் 69 பேர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 169 பேர் படுகாயமடைந்ததாகவும் உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்கள் பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் சிடிஏ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்கொலை குண்டுதாரி ஆப்கானிஸ்தானுடன் தொடர்புடையவர் என்று இஸ்லாமாபாத் போலீசார் கூறுகின்றனர்.
டிடிபி தாக்குதல் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 2, 2026, 2:31 pm
மோசமான செயல்திறன் காரணமாக 1,800 உம்ரா பயண நிறுவனங்களை சவுதி அரேபியா இடைநிறுத்தியுள்ளது
January 31, 2026, 1:12 pm
500 முறைக்கும் மேல் ஊசி குத்தப்பட்ட குழந்தை: சீனாவில் பரபரப்பு
January 30, 2026, 5:41 pm
நடுவானில் கழன்று விழுந்த விமானச் சக்கரம்
January 30, 2026, 4:36 pm
அமெரிக்காவில் கடும் குளிர் தாக்கம்: 30 பேர் உயிரிழப்பு
January 29, 2026, 1:59 pm
தாய்லாந்து காட்டு யானைகளுக்கு கர்ப்பத் தடுப்பு ஊசி
January 29, 2026, 10:33 am
கொலம்பியாவில் விமான விபத்து: 15 பேர் உயிரிழப்பு
January 19, 2026, 3:41 pm
பெக்கான்பாருவில் ரோஹிங்கியா மக்கள் போராட்டம்: உதவித் தொகை அதிகரிக்க கோரிக்கை
January 19, 2026, 3:06 pm
