செய்திகள் உலகம்
சிங்கப்பூர் செந்தோசாவில் முதலை தென்படாததால் மீண்டும் பொது மக்கள் விளையாட அனுமதி: எஸ்டிசி பேச்சாளர்
சிங்கப்பூர்:
செந்தோசாவின் மூன்று கடற்கரைகளிலும் ஞாயிற்றுக் கிழமையிலிருந்து (பிப்ரவரி 8) நீர் விளையாட்டுகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் முதலை நடமாட்டம் தெரிய வந்ததால் செந்தோசா நீர் விளையாட்டுகளுக்கு கடந்த வாரம் தடை விதிக்கப்பட்டது.
செந்தோசாத்தீவு மேம்பாட்டு கூட்டுநிறுவனத்தின் (எஸ்டிசி) பேச்சாளர் ஒருவர், “ஜனவரி 31 முதல் எஸ்டிசியும் தேசிய பூங்காக் கழகமும் நடத்திய தொடர்ச்சியான தினசரிக் கண்காணிப்பு, ஒருங்கிணைந்த சுற்றுக் காவலுக்குப் பிறகு செந்தோசா நீர்நிலைகளில் முதலையைப் பார்க்க முடியவில்லை,” என்றார்.
“இதன் அடிப்படையில், நீச்சல், படகோட்டம் உட்பட இதர நீர் நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கலாம்.
“எஸ்டிசி தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்” என்று அவர் கூறினார்.
கடந்த ஜனவரி 31ஆம் தேதி செந்தோசா கோவ் வீட்டுக்கு அருகே முதலை தென்பட்டதால் செந்தோசாவின் சிலோசா, பலவான், தஞ்சோங் கடற்கரைகள் மூடப்பட்டன.
இதனை பரிசீலித்த எஸ்டிசியும் தேசிய பூங்காகக் கழகமும் கூட்டாக முதலையைத் தேடி கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன.
இதற்கிடையே பலவான் கடற்கரையில் பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த மெட்டாஸ்பிரிண்ட் நீர் விளையாட்டுப் போட்டி பிப்ரவரி 8ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
பிப்ரவரி 1ஆம் தேதி மரினா சவுத் பியர் நீர்ப்பகுதியில் ஒரு முதலை தென்பட்டதாகக் கூறப்பட்டது.
ஆதாரம்: NST
தொடர்புடைய செய்திகள்
February 7, 2026, 3:49 pm
நிப்பா வைரஸ்: வங்காள தேசத்தில் பெண் உயிரிழந்ததை WHO உறுதிப்படுத்தியது
February 6, 2026, 11:01 pm
பாகிஸ்தான் பள்ளிவாசலில் தற்கொலை படை தாக்குதல்: 69 பேர் பலி: 169-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
February 2, 2026, 2:31 pm
மோசமான செயல்திறன் காரணமாக 1,800 உம்ரா பயண நிறுவனங்களை சவுதி அரேபியா இடைநிறுத்தியுள்ளது
January 31, 2026, 1:12 pm
500 முறைக்கும் மேல் ஊசி குத்தப்பட்ட குழந்தை: சீனாவில் பரபரப்பு
January 30, 2026, 5:41 pm
நடுவானில் கழன்று விழுந்த விமானச் சக்கரம்
January 30, 2026, 4:36 pm
அமெரிக்காவில் கடும் குளிர் தாக்கம்: 30 பேர் உயிரிழப்பு
January 29, 2026, 1:59 pm
தாய்லாந்து காட்டு யானைகளுக்கு கர்ப்பத் தடுப்பு ஊசி
January 29, 2026, 10:33 am
